சியாட்டிகா வர காரணம் என்ன தெரியுமா?
நரம்பை எரிச்சலூட்டும் எதுவும் சியாட்டிகாவை ஏற்படுத்தும். தொற்று, இடுப்பு காயம் அல்லது எலும்பு முறிவு, கட்டிகள் கூட சில நேரங்களில் இதற்குக் காரணமாகும்.
பின் பகுதியில் வலி மற்றும் தொடையின் பின்புறம், முழங்கால் மற்றும் காலின் பின்புறம் வரை நீட்டிக்கப்படுவது மிகவும் பொதுவான அறிகுறியாகும்.
எம்.ஆர்.ஐ மற்றும் எக்ஸ்-ரே பரிசோதனை மூலம் என்ன பிரச்னையால் சியாட்டிகா ஏற்பட்டிருக்கிறது என்பதைக் கண்டறியலாம்.
ஃபிஸியோதெரபிதான் இதற்கான சிகிச்சையாகப் பரிந்துரைக்கப்படுகிறது. தீர்க்க முடியாத, குணப்படுத்த முடியாத பிரச்னையாக இது உருவெடுக்காது.