ரத்ததானம் செய்வது உடலை பலவீனமாக்குமா?

ரத்த தானம் செய்பவர் 18 வயது நிரம்பியவராகவும், 60 வயதை மிகாதவராகவும் இருத்தல் அவசியம். ஹீமோகுளோபின் அளவு, 12 கிராமிற்கு குறையாமலும், 16 கிராமிற்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

உடல் எடை 50 கிலோவுக்கு குறையாமல் இருக்க வேண்டும். ஆண், பெண் இருபாலரும் ரத்த தானம் செய்ய தகுதியுடையவர்கள். எந்த ஒரு தொற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டவராக இருக்கக்கூடாது.

கடந்த ஓராண்டுக்குள் எந்த தடுப்பு மருந்தும் பயன்படுத்தி இருக்கக்கூடாது.

ரத்தப் பிரிவு, ரத்தத்தில் மஞ்சள் காமாலை, மலேரியா, பால்வினை நோய் மற்றும் எய்ட்ஸ் கிருமிகள் உள்ளதா என பரிசோதிக்கப்பட்டு ரத்த தானமளிப்பவர்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது.

இது பிறர் நலன் காப்பதற்கு மட்டுமல்ல, தன் நலன் மேம்படுவதற்கும் உதவும். ரத்த தானம் செய்வது இயற்கையாக புதிய ரத்தம் உடலில் ஏற்றப்படுவதற்குச் சமம்.

தற்போதைய பல ஆய்வுகளில் தொடர்ச்சியாக ரத்த தானம் செய்பவர்களுக்கு மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு குறைவென, கண்டறியப்பட்டுள்ளது.

ஹீமோகுளோபின் அளவினை கட்டுப்படுத்தவும், சமச்சீராக பராமரிக்கவும் இது பயன்படுகிறது.

மேலும், ரத்த அழுத்தம் சீராக பராமரிக்கப்படுவதுடன், பலவிதமான நோய்கள் தவிர்க்கப்படுகின்றது.

இதனால், எந்த பின் விளைவுகளும் ஏற்படாது. மயக்கம் ஏற்படுதல் போன்றவை அனைத்தும் பயத்தினாலேயே என்பது தான் உண்மை.

மயக்கம் ஏற்பட்டால் உடனே கால்களை மேலே தூக்கியவாறு தரையில் படுக்கவோ, கால்களுக்கு இடையில் தலையனை வைத்தவாறு உட்காரவோ வைத்தால், உடனே பழைய நிலைக்கு திரும்புவர்.