நாய்கள் தங்கள் கண்ணீர் மூலம் உணர்ச்சிகளை வெளிப்படுத்துமா?

மனிதர்களுக்கு இணக்கமான நாய்கள், நீண்ட நாள் கழித்து உரிமையாளரைப் பார்க்கும் போது கண்ணீர் சிந்துமா என்று ஆராய்ச்சி நடத்தப்பட்டது.

நாய்கள் தங்கள் கண்ணீர் நரம்பிலையை சுத்தமாக வைத்திருக்க, கண்ணீர் சிந்துமாம். ஆனால் அவை உணர்ச்சிகளுடனும் இணைந்திருப்பவை என்று ஆய்வு கூறுகிறது.

நாய்கள் சந்தோஷத்தைப் பகிர, கண்ணீர் சிந்துகின்றனவாம் என்று, ஜர்னல் கரண்ட் பயாலஜி எனப்படும் ஆய்வு கூறுகிறது.

ஸ்கிர்மர் டெஸ்ட் மூலம் நாய்களின் கண்ணீருக்கு காரணம், ஆக்சிடோஸின் ஹார்மோன் என்று நிரூபணம் செய்தனர்.

அதற்காக நாய்களை ஐந்து மணி நேரம் அதன் உரிமையாளர்களிடம் பிரித்து வைத்து சோதித்துப் பார்த்தனர்.

நாய்கள் தங்களுக்குத் தெரிந்த வகையில் வாழை ஆட்டுவது, கால்களை சுற்றி வருவது போன்றவற்றைத் தாண்டி கண்ணீர் சிந்தியும் அன்பை வெளிப்படுத்துகின்றனவாம்.

நாய்களின் கண்ணீர் உணர்வுபூர்வமானது என நிரூபித்தது இந்த ஆய்வே, என்று அவர்கள் பெருமிதம் கொள்கின்றனர்.

இந்த ஆய்வானது ஜப்பானில் உள்ள அசாபு பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்டது.

நாய்கள் தங்கள் உரிமையாளர்களை பார்க்கும் பொழுது இவ்வாறு ஆனந்த கண்ணீர் சிந்துகின்றன என்று தெரியவந்தது.

மேலும் அது எதிர்பாலினங்கள் மற்றும் புதிய நபர்களை பார்த்தாலும் இதுபோன்று நடந்து கொள்கிறதா என்று கோணத்தில் ஆய்வினைத் தொடர உள்ளனர்.