சர்வதேச பெண் குழந்தைகள் தினம் இன்று !

உலகில் 13.30 கோடி பெண் குழந்தைகள் பள்ளி செல்லாமல் உள்ளனர்.

15 - 19 வயது பெண்களில் பத்தில் நான்கு பேர் மேல்நிலை படிப்பை முடிப்பதில்லை.

15- 19 வயது திருமணமான பெண்களில் நான்கில் ஒருவர் கணவனால் வன்கொடுமையை சந்திக்கின்றனர்.

அவர்களின் மீதான குற்றங்களை தடுத்தல், கல்வி, சுகாதார உரிமையை பாதுகாக்க வலியுறுத்தி ஐ.நா., சார்பில் அக்.,11ல் சர்வதேச பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது.

ஆண் குழந்தைகளுக்கு கிடைக்கும் கல்வி, சத்தான உணவு போன்ற அனைத்து வசதிகளும், பாலின பாகுபாடின்றி பெண் குழந்தைகளுக்கும் தர வேண்டும் என இத்தினம் வலியுறுத்துகிறது.

இந்நாளில், பெண் குழந்தைகளின் உரிமைகளை பாதுகாக்க வலியுறுத்தி, அனைவரும் உறுதிமொழி எடுக்க முன்வர வேண்டும்.

குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் வன்கொடுமை, குழந்தை திருமணம், பாதுகாப்பு, சைல்டு லைன் 1098 எண் குறித்தும் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும்.

பெண் குழந்தையை சுமையாக கருதாமல், அவர்களை கொண்டாடும் தற்போதைய இளம் தலைமுறை பெற்றோர்களால் சமூகத்தின் பார்வை மாறத் துவங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.