பனியால் தோல் வறண்டு போகிறதா? தீர்வு என்ன?
பனிக் காலங்களில் எண்ணெய் சுரப்பியின் அளவு குறையும்போது தோலில் அரிப்பு, வெடிப்பு, அலர்ஜி ஏற்படும்.
தோல் வறண்டு போவதைத் தடுக்க தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் ஆயில் தேய்க்க வேண்டும். இது தோலில் எண்ணெய் சுரப்பியின் அளவை சமன்படுத்தி பாதுகாக்கும்.
இதற்காக மருந்து உட்கொள்ள வேண்டியதில்லை. ஆடை அணியும்போது வெளியில் தெரியும் உடல் பாகங்களில் மட்டும் இது போன்ற பிரச்னை அதிகம் ஏற்படும்.
அதனால் குளிர் காலங்களில் கை, கால்கள் முழுவதும் மூடும் வகையில் ஆடை அணிவது நல்லது.
உணவில் உலர் பழங்கள், ஆலிவ் ஆயில், தேங்காய், நெய் போன்ற நல்ல கொழுப்பு நிறைந்த உணவுகளை சேர்த்துக் கொள்ளலாம்.
வெதுவெதுப்பான தண்ணீரை குடிக்கவேண்டும். சீரகத் தண்ணீர் குடித்தால் செரிமான பிரச்னைகள் சீராவதுடன் தோல் பளபளக்கும்.
பனிக்காலங்களில் சோப்பு போட்டு குளிப்பதை தவிர்க்கலாம்.
ஆஸ்துமா, சைனஸ் பிரச்னைகள் உள்ளவர்கள் நீர்க்காய்கறிகளை சேர்ப்பதை தவிர்த்து அதிக நார்ச்சத்து உடைய காய்கறிகளை உணவில் சேர்க்க வேண்டும்.