கர்ப்ப காலத்தில் ஈறுகளில் ரத்தக்கசிவு ஏற்படுவது இயல்பா?
கர்ப்ப காலத்தில் ஈறுகளில் ரத்தக்கசிவு உண்டாவது பொதுவான ஒன்று. இது நான்கு முதல் ஆறு மாதங்கள் வரை இருக்கக்கூடும்.
மூன்றாவது மூன்று மாதங்களில் உணர்திறன், ரத்தக்கசிவு அதிகமாக இருக்கக்கூடும். ஏற்கனவே ஈறுகளில் ஆரோக்கிய குறைபாடு இருந்தால் கர்ப்பகாலத்தில் இன்னும் அதிகரிக்கக்கூடும்.
கர்ப்பகால ஹார்மோன்களில் ஈஸ்ட்ரோஜன், புரோஜெஸ்டிரோன் முக்கியமானவை. இவை ரத்த ஓட்டத்தை அதிகரிப்பதால் ஈறுகளில் வீக்கம் உண்டாகக்கூடும்.
உணவில் மாற்றங்கள் ஏற்பட்டாலும் அவை ஈறுகளில் வீக்கத்தை உண்டாக்கும். குறிப்பாக கார்போஹைட்ரேட் அதிகமுள்ள மற்றும் துரித உணவுகள் ஈறு பிரச்னைக்கு வழிவகுக்கும்.
கர்ப்ப காலத்தில் குறைவாக சுரக்கும் உமிழ்நீரால் பல் சிதைவு, ஈறு நோயை உண்டாக்கும் பாக்டீரியாக்களால் பல் வலி உண்டாகும்.
உமிழ்நீரில் அதிக அமிலத்தன்மை இருந்தாலும் பல் அரிப்பு மற்றும் சிதைவுக்கு வாய்ப்புள்ளது. ஈறு வீக்கம் பெரும்பாலும் பிரசவத்துக்கு பின் மறைந்துவிடும்.
எனவே, பல் துலக்கும் முன் சுத்தமான நீரில் வாய் கொப்புளிக்க வேண்டும். அதேப்போல் உணவு சாப்பிட்ட பிறகும் வாய் கொப்புளிப்பது அவசியம்.
இனிப்பு நிறைந்த உணவுகளை தவிர்க்கலாம். வைட்டமின் சி, கால்சியம் உள்ள உணவுகள் பற்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். பாதிப்பின்போது டாக்டரிடம் ஆலோசிக்க வேண்டும்.