அல்சர் இல்லாத டிஸ்பெப்சியா... தீர்வென்ன?
ஒருசிலருக்கு அல்சர் அறிகுறிகள் இருப்பினும், 'எண்டோஸ்கோப்பி' செய்யும் போது நார்மல் என வரக்கூடும்.
இந்த பிரச்னை இப்போது அதிகம் பேரிடம் காணப்படுகிறது. ஆனால், 'எண்டோஸ்கோப்பி'யில் அல்சர் இல்லை என்று முடிவுகள் வருவதால் குழப்பம் வரும்.
இதை 'அல்சர் இல்லாத டிஸ்பெப்சியா' என்பர்.
இரைப்பையில் புண்ணோ, அழற்சியோ இல்லாவிட்டாலும் செரிமானம் ஆகாத உணர்வு இருக்கும்.
இதனால் இவர்களுக்கு மனச்சோர்வு ஏற்படும். இது இரைப்பைச் சோர்வாக மாறும்.
மனச்சோர்வும் இரைப்பைச் சோர்வும் ஒரு சுழற்சியாக மாறி, செரிமானப் பிரச்னைகளை அதிகப்படுத்தும்.
இதற்கு நேரடி தீர்வு இல்லை. இவர்கள் உடலில் எந்தப் பிரச்னையும் இல்லை என்பதை உணர்த்தி, மனச்சோர்வைக் குறைக்க கவுன்சலிங் தருவதுதான் ஒரே வழி.