வெள்ளெழுத்து எதனால் ஏற்படுகிறது?
பொதுவாக 40க்கு மேல் வயதாகும் போது அருகிலுள்ள பொருளை அவ்வளவாக பார்க்க முடியாதது, எழுத்துக்களை வாசிக்க முடியாத நிலையை வெள்ளெழுத்து என்கிறோம்.
கண்களுக்கும் எதிரே உள்ள பொருள்களுக்குமான இடைவெளி அதிகரிப்பதை 'பிரஸ்பையோபியா' என்போம். அடிப்படையில், 20 செ.மீ தூரத்தில் பார்த்து வந்த பொருளை, இப்போது 30 செ.மீ தூரத்தில் தெரியும்.
இந்த பிரச்னை உள்ளவர்கள் சற்று தள்ளி வைத்து படிப்பதை பார்க்கலாம். பார்வைக்குச் சிரமப்படும் சூழல்களில் மட்டும், மூக்குக்கண்ணாடி அணிந்தால் போதுமானது.
நாற்பதைத் தாண்டியதும் வருடத்துக்கு ஒருமுறை பரிசோதனை செய்ய வேண்டும். சர்க்கரை நோயாளிகள் மாதம் ஒருமுறை பரிசோதனை செய்ய வேண்டியது அவசியம்.
வயதாகும் போது கண் நரம்புகளில் ஏற்படும் தளர்ச்சி, கண்ணின் நெகிழ்வுத்தன்மை குறைவது போன்றவை இதற்கு காரணம்.
கண்ணை அடிக்கடி இமைப்பது, துாரத்திலும் அருகிலும் அடிக்கடி பார்ப்பது போன்ற கண்பயிற்சிகள் மூலம் சரிசெய்யலாம். கண்ணில் ஈரத்தன்மை இருப்பது அவசியம்.
மருத்துவரின் பரிந்துரையின்றி, கண்களுக்குச் சொட்டு மருந்து உபயோகிக்கக் கூடாது. பார்வை மங்குதல் பிரச்னை ஏற்பட்டால், அதைத் தவிர்க்கக்கூடாது.
ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். முருங்கை இலையை காயவைத்து கல்உப்பு சேர்த்து பொடி செய்து தினமும் ஒரு ஸ்பூன் சாப்பிடுவது நல்லது.