மார்கழியின் அதீத பனியால் உடலில் ஏற்படும் பிரச்னை என்னென்ன?
அதிக பனியால் உடல் குளிர்ச்சி அடையும். நமது உடல் சுற்றுச்சூழலின் வெப்பநிலையைச் சமன் செய்வதற்காக முயற்சிக்கும்.
அப்போது உடலில் உள்ள வெப்பம் வெளியேறி, வெப்பத்தை தக்க வைக்க ரத்தக்குழாய்கள் சுருங்குவதால் கை, கால்கள் குளிர்ச்சி அடைகின்றன.
காய்ச்சல், சளி போன்ற தொற்று நோய்கள் நேரத்தில் உடல் தன்னை தற்காத்துக் கொள்ள வெப்பநிலையை உயர்த்தும்போதுதான் நடுக்கம் உள்ளிட்ட எதிர்வினைகள் ஏற்படுகின்றன.
குழந்தைகளை காலை, மாலை, இரவில் வெளியில் துாக்கிச் செல்வதை தவிர்க்க வேண்டும்.
தவிர்க்க முடியாத நேரங்களில் குழந்தையின் கால்களில் சாக்ஸ், உடலில் ஸ்வட்டர், தலை, காது மறைத்து குல்லா அணிந்து கொள்ளலாம்.
நீரை எப்போதும் வெதுவெதுப்பாக காய்ச்சி பருக வேண்டும்.
பெண்கள் தலை, கை, கால்களில் காட்டன் துணிகளால் ஆன கையுறைகளை, கால்களுக்கு சாக்ஸ் அணிந்து கொள்ளலாம்.
குளிர்ந்த காற்று, குளிர்ந்த நீரில் பாக்டீரியா தொற்றுக்கள் ஏற்படும் என்பதால் பாதுகாப்பு அவசியம்.
இதனை உணர்ந்து கர்பிணிகள், இளம் தாய்மார்கள் மார்கழி, தை மாத பனி காலங்களில் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.