கனவுத்தோட்டத்தில் தர்பூசணி செடிகளை வளர்க்க ஈஸி டிப்ஸ்

தினமும் குறைந்தப்பட்சமாக 8 மணி நேரமாவது வெயில் தேவை என்பதால், சூரிய ஒளி நன்றாக படுமிடத்தில் தர்பூசணி செடிகளை நட வேண்டும்.

மண்ணுடன் எரு, ஊட்டச்சத்துக்களை நன்றாக கலந்து குறைந்தப்பட்சமாக 2 வாரங்கள் கழித்து செடிகளை நடலாம்.

தர்பூசணி விதைகளை 1 இன்ச் ஆழத்திலும், 3 - 4 அடி இடைவெளியிலும் விதைக்க வேண்டும்.

மண் ஈரப்பதமாக இருக்க வேண்டும். அதேவேளையில் அதிக தண்ணீர் விடக்கூடாது.

வேர்ப்பகுதியில் மட்டும் தண்ணீர் விட்டால் போதுமானது. இலைகளில் ஈரப்பதம் இருந்தால் பூஞ்சை காளான் மற்றும் பிற பூஞ்சை நோய்களுக்கு வழிவகுக்கும்.

பூச்சிகளை தவிர்க் வேப்ப எண்ணெய் போன்றவற்றை பயன்படுத்தலாம். அவ்வப்போது பூஞ்சை நோய் அறிகுறிகளை சரிபார்த்து குறிப்பிட்ட இலைகளை அகற்றி விடவும்.

பழம் முதிர்ச்சியடைய 60 - 90 நாட்களாகும். இளம் மஞ்சள் நிறத்தில் தர்பூசணியின் அடிப்பகுதி மாறினால் அறுவடை செய்யலாம்.