தோல்வி தான் வெற்றிக்கு முதல் படி...

மதிப்பெண் குறைவாக வந்தால் அல்லது தேர்வில் தோல்வி அடைந்தால் என்ன மாணவர்கள் செய்ய வேண்டும் என பார்க்கலாம்.

முதலில், தனியாக இருக்க வேண்டாம். பெற்றோர், ஆசிரியர்கள், நண்பர்களுடனும் மனம் விட்டு பேசுங்கள். பேசுவது ஒரு தீர்வின் தொடக்கம்.

உளவியல் நிபுணர்களின் உதவியை நாடுங்கள்; சரியான நேரத்தில் கேட்கப்படும் ஒரு உதவி, ஒரு வாழ்க்கையை காப்பாற்றக்கூடும்.

உங்களை மற்றவர்களுடன் ஒப்பிட வேண்டாம். சமூக ஊடகங்களில் வரும் ஒப்பீட்டு அழுத்தங்களை தவிர்த்திடுங்கள்.

தோல்வியை ஒரு அனுபவமாக எடுத்துக்கொள்ளுங்கள். வாழ்க்கை தேர்வு முடிவை விட மிகப்பெரியது.

பெற்றோரும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். 'உன்னால் முடியும்' என்ற பெற்றோரின் வார்த்தைகளும், 'நான் உன்னுடன் இருக்கிறேன்'என தோள் கொடுப்பதும் அவசியம்.

கலை, விளையாட்டு, தொழில் திறன், தொழில் முனைவு, சமூகத் திறன், மனிதநேயம் ஆகிய அனைத்தும், வாழ்க்கையின் வெற்றியை நிர்ணயிக்கும் முக்கிய அம்சங்கள்.

24x7 தற்கொலை தடுப்பு உதவி எண்:1800 2028 760