காது அடைப்புக்கு காரணங்கள் பல உண்டு… தீர்வு என்ன?

பொதுவாக தண்ணீர் காதுக்குள் சென்றால் உடனே காதுகள் அடைப்பது போன்று இருக்கும்.

மேலும் அதிகப்படியாக காது மெழுகு சேருவதும் ஒரு முக்கிய காரணமாகும்.

செவிப்பறையின் இருபுறமும் காற்றழுத்தத்தில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக காது அடைப்பு ஏற்படலாம்.

இது அதிக உயரத்தில் ஏறும் போது அல்லது விமானத்தில் பயணிக்கும் போது நிகழலாம்.

சளிப்பிடிக்கும்போது மூக்கிலுள்ள திரவமானது காதுகளிலுள்ள யூஸ்டாசியன் குழாயையும் அடைக்கிறது. இதனால் காது வலி மற்றும் அடைப்பு ஏற்படுகிறது.

காட்டன் பட்ஸ் பயன்படுத்துவதால் காதில் உள்ள அழுக்கு வெளிநோக்கி தள்ளப்படுவதற்கு பதிலாக காதுகளின் உட்புறம் தள்ளப்படுகிறது. அதனால் பட்ஸ் பயன்படுத்துவதை தவிர்க்கலாம்.

காதில் வலி , அரிப்பு அல்லது அடைப்பு ஏற்படும்போது மருத்துவரை அணுகுவதே நல்லது. சுய மருத்துவம் செய்வது காதுகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம்.

காதில் நீர் புகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். சுத்தமாக வைத்திருக்க வேண்டும். குளிர்ந்த காற்று காதுக்குள் செல்வதை தவிர்க்க பஞ்சு, தடுப்பான் வைக்கலாம்.