உங்களைச் சுற்றியுள்ள யாருக்கும் குளிராதபோது உங்களுக்கு மட்டும் குளிராக உள்ளதா?

ஒரு சில ஊட்டச்சத்து குறைபாடுகள் காரணமாக, மற்றவர்களை விட உங்களின் உடல் எளிதாக குளிர்ச்சியை உணர்கிறது.

இரும்புச்சத்து குறைபாடு, உடலில் உள்ள திசுக்களுக்கு தேவையான அளவு சிவப்பணுக்கள் இல்லாதபோது ரத்தசோகையை ஏற்படுகிறது. இது சோர்வு, பலவீனம், குளிர்ச்சியான உணர்வு உள்ளிட்ட அறிகுறிகளை ஏற்படுத்தும்.

வைட்டமின் பி12 அல்லது ஃபோலிக் அமிலம் உடலில் குறைவாக இருந்தால், ரத்தசோகையை உண்டாக்குவதோடு, அதிகளவில் குளிர்ச்சியை உணர வைக்கிறது.

ரத்த ஓட்டம் பாதிக்கப்படும் போது, உடலின் உறுப்புகள் மற்றும் திசுக்களுக்கு ரத்தம் சரியாக செல்லாத காரணத்தினால் உடல் குளிர்ச்சியை உணர்கிறது.

நீர்ச்சத்து உடலில் குறைவாக இருப்பதால் ரத்தசோகையை உண்டாக்குகிறது மற்றும் மோசமான ரத்த ஓட்டத்தை ஏற்படுத்துகிறது.இதனால் உடல் குளிர்ச்சியாக உள்ளது.

ஹைப்போ தைராய்டு பிரச்னை இருந்தால், உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை மெதுவாக்கி குளிர்ச்சியை உணர வைக்கும்.

நீரிழிவு பாதிப்பு மற்றும் மல்டிபிள் ஸ்களீரோசிஸ் போன்ற சில நாள்பட்ட நோய்கள் உடலின் வெப்பநிலையை கட்டுப்படுத்தும் திறனை பாதிக்கிறது.இதனால் அதிகப்படியான குளிர்ச்சி உடலில் ஏற்படுத்துகிறது.

வயதாகும்போது உங்கள் உடலின் வெப்பநிலையைக் கட்டுப்படுத்தும் திறன் குறையக்கூடும். இது குளிர்ச்சியாக இருப்பது போன்ற உணர்வுகளை ஏற்படுத்தும்.