தொடர்ந்து ஐஸ் ஃபேஷியல் செய்தால் சருமம் பாதிக்கப்படுமா?

ஐஸ் ஃபேஷியல் செய்வதால் சருமம் குளிர்ச்சி அடைவதுடன் பளபளப்பும் அதிகரிக்கக்கூடும். ஆனால் தொடர்ந்து இவ்வாறு செய்யும்போது, முகத்தில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது.

நேரடியாக ஐஸ் கட்டிகளை முகத்திலோ, சருமத்திலோ தடவினால், சில சமயங்களில் எரிச்சல் ஏற்படலாம். எனவே, காட்டன் அல்லது கர்ச்சீப் போன்றவற்றில் ஐஸ் கட்டியை எடுத்து மசாஜ் செய்ய வேண்டும்.

முகத்தை கழுவாமல் நேரடியாக ஐஸ் வாட்டர் ஃபேஷியல் செய்தால், முகத்தில் பாக்டீரியா தொற்று ஏற்படும் வாய்ப்புள்ளது.

சென்சிடிவ் ஸ்கின் கொண்டவர்களுக்கு இது ஏற்றதல்ல. இந்த வகையான சருமம் உள்ளவர்களுக்கு முகம் சிவந்து போகக்கூடும்.

ஐஸ் ஃபேஷியல் சருமத்திற்கு ரத்த ஓட்டத்தை பாதிக்கும் என்பதால் கவனமாக இருக்க வேண்டும்.

ஏற்கனவே தோல் தொடர்பான நோய் அல்லது பிரச்னைகள் இருந்தால், டாக்டரின் ஆலோசனையின்றி செய்யக்கூடாது.

ஐஸ் வாட்டர் ஃபேஷியல் செய்யும் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கட்டாயமாக பின்பற்ற வேண்டும். அழுத்தமாக முயற்சிக்கும்போது, தோலில் கீறல் ஏற்படலாம்.