அமிலத்தை அதிகரிக்கும் மன அழுத்தம்!
அல்சர், வாயுத் தொல்லை இரண்டும், 80 சதவீதம் பேருக்கு இருக்கிறது.
'டீன் ஏஜ்' துவங்கி எல்லா வயதினருக்கும் அல்சர் பிரச்னை உள்ளது. இதற்கு உணவுப் பழக்கம் மட்டுமே காரணம் இல்லை.
இளம் வயதினரிடம் அதிகமாகப் காணப்படும் பிரச்னை, மன அழுத்தம். இதனால் முதலில் பாதிக்கப்படுவது துாக்கம்.
வேலைப் பளு, குடும்ப பொறுப்பு, இவை அனைத்தையும் விட கம்ப்யூட்டர், போன் ஸ்கிரீன் பார்க்கும் நேரம் முழுமையாக ஆக்கிரமித்து உள்ளது.
துாக்கம் குறைந்தால், வயிற்றில் நிறைய அமிலம் சுரக்கும். இது அல்சர், வாயுத் தொல்லை, அமிலம் மேலேறுதல் என்று பல பிரச்னைகளுக்கு வழி செய்யும்.
மன அழுத்தமும் இருந்தால், சாதாரணமாக சுரக்கும் அமிலத்தை விடவும் அதிக அளவில் சுரக்கும்.
என்ன பிரச்னை இருந்தாலும், வயிறு நலனை மனதில் வைத்து, குறைந்தது ஆறு மணி நேரம் துாங்க வேண்டும்.இதனாலேயே 90 % பிரச்னைகள் சரியாகி விடும்.
இது தவிர, காலையோ, மாலையோ, அரை மணி நேரம் சுறுசுறுப்பாக நடை பயிற்சி செய்யலாம்.
உடற்பயிற்சி இருந்தால், அட்ரினலின் சுரப்பது குறைந்து, உடம்பில், மனதில் உள்ள அழுத்தம் குறைந்து விடும்; துாக்கமும் நன்றாக வரும்.