3 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு அடிக்கடி சளி தொந்தரவா? தவிர்க்க சில வழிகள்?
குழந்தைகளுக்கு அடிக்கடி சளி பிடிப்பதை தவிர்க்க நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் உணவு பழக்கத்தில் மாற்றம் செய்யலாம்.
பொதுவாக பருவ நிலை மாற்றத்தால் வரும் வைரஸ் தொற்றுகளால் சளி, காய்ச்சல் ஏற்படுகிறது.
சுவாச மண்டல பிரச்னைகள், ஆஸ்துமா, மூச்சு குழாய் வளர்ச்சி போன்ற பிரச்னைகள் சளி உற்பத்தியை அதிகரிக்கலாம்.
காற்று மாசு காரணமாகவும் சளி ஏற்பட வாய்ப்புண்டு. தடுப்பூசி எடுத்துக் கொள்ளாமல் இருப்பது, நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு என காரணங்களை பட்டியலிடலாம்.
குழந்தைகளுக்கு போதுமான ஓய்வு அளிப்பது, பழங்கள், காய்கறிகள், புரத உணவுகள் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டும்.
தண்ணீர், திரவ உணவுகளை அதிகமாக கொடுப்பதால் சளியை தளர்த்தி உடலின் நீர் இழப்பை தடுக்கலாம்.
அட்டவணை வரன்முறைப்படி குழந்தைகளுக்கு உரிய நேரங்களில் தடுப்பூசி செலுத்துவதால் சளி காய்ச்சலில் இருந்து பாதுகாக்கலாம்.
வீட்டை சுத்தமாக வைத்துக் கொண்டு கிருமிகள் பரவுவதை தடுப்பது, குழந்தைகளுக்கு அடிக்கடி கைகள் கழுவும் பழக்கத்தை ஏற்படுத்துதல் அவசியம்.
சளி அறிகுறி உள்ளவர்களிடமிருந்து விலக்கி இருத்தல், வைட்டமின்கள், தாதுக்கள் நிறைந்த உணவுகளை கொடுப்பதன் மூலம் பாதுகாக்க உதவும்.