தோல்வி என்பது... ஹென்றி ஃபோர்டின் ஊக்கமூட்டும் வரிகள்
ஒன்று சேர்வது ஒரு ஆரம்பம்; ஒன்றாக இருப்பது முன்னேற்றம்; ஒன்றாக வேலை செய்வது வெற்றியை தரும்.
உங்களால் ஒரு காரியத்தை முடிக்க முடியும் என்றால் அது முடியும்; முடியாது என்றால் முடியாது. இதுவே மனதின் அரிய சக்தி.
தோல்வி என்பது மீண்டும் துவங்குவதற்கான ஒரு வாய்ப்பு. அதுவும் இன்னும் புத்திசாலித்தனமாக.
தவறு நேர்ந்து விடுமோ என அஞ்சி அஞ்சி எந்தச் செயலையும் செய்யாமல் பின்வாங்குவது இழிவான ஒன்று.
20 வயதாக இருந்தாலும் சரி, 80 வயதாக இருந்தாலும் சரி, கற்றுக்கொள்வதை நிறுத்துபவர் வயதானவரே. கற்றுக்கொண்டே இருப்பவர் இளமையாகவே இருப்பர்.
உலகம் உங்களுக்காகச் செய்வதை விட உலகத்திற்காக அதிகமாகச் செய்வதே வெற்றி.
பிரியமான வேலை எதுவும் சிரமமானது அல்ல.
அனைத்துக்கும் முன்னால் வெற்றியைப் பெற தயாராவது தான் வெற்றியைப் பெறுவதற்கான முதல் படி.