அதிகம் சேமித்து வைக்க கூடாத உணவுப்பொருட்கள்: உங்கள் வீட்டில் இவை இருக்கா?
அதிகளவில் வாங்கி சேமித்து வைக்க கூடாத பொருட்களை குறிந்து தெரிந்து கொள்வோம்.
மசாலா பொருட்கள் குறிப்பிட்ட காலத்திற்கு தான் அதன் சத்துக்களை பெற்றிருக்கும். ஆகையால் இந்த பொருட்களை தீர்ந்து போன பிறகு வாங்கி பயன்படுத்துவது சிறந்தது.
சமையல் எண்ணெய் லிட்டர் கணக்கில் வாங்கி சேமித்து வைக்கும் போது, நாளடைவில் அதன் தன்மையை இழக்க நேரிடும்.
பால் பொருட்களை அதிகளவில் வாங்கி சேமித்து வைப்பதனால், அதன் சத்துக்களை இழக்க நேரிடும். ஆகையால் தேவைக்கு ஏற்ப தினமும் புதிதாக வாங்கி பயன்படுத்துவது சிறந்தது.
காய்கறிகள் மற்றும் பழங்கள் தினந்தோறும் வாங்கி பயன்படுத்தினால் மட்டுமே அதன் ஆரோக்கிய பலன்களை பெறமுடியும்.
நட்ஸ் வகைகளை மாதக் கணக்கில் சேமித்து வைக்கும் போது, சத்துக்கள் மற்றும் ஆரோக்கிய பலன்களை இழக்க நேரிடும்.
மாவு வகைகளை சேமித்து வைப்பதை மக்கள் வாடிக்கையாக கொண்டுள்ளனர். இதனால் பூச்சி, புழு தொல்லைகள் அதிகரித்து மாவுகளின் சத்துகள் குறைகிறது.
பிரட் வகைகள் ஆயுட்காலம் அதிகபட்சம் 7நாட்கள் என்றாலும், மக்கள் இதையும் அதிகளவில் வாங்கி சேமித்து வைக்கின்றனர். இதை முற்றிலும் தவிர்த்து தேவைக்கு ஏற்ப வாங்கி பயன்படுத்துவது சிறந்தது.