வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்

அலைபேசியில் வெப்பம் அதிகரிக்கும் போது தானே 'ரீ-ஸ்டார்ட்' ஆவதை போன்று உடல் வெப்பநிலை 101 டிகிரியை தாண்டும்போது மூளையின் வெப்பம் அதிகரித்து வலிப்பு ஏற்படுகிறது.

காய்ச்சலுடன் கூடிய வலிப்பின்போது இரு கை, கால்கள் வெட்ட ஆரம்பித்தல், சிறிது நேரம் மூர்ச்சை நிலையில் இருப்பது, சுயநினைவின்றி சிறுநீர், மலம் கழிக்கவும் வாய்ப்புண்டு.

வாந்தி எடுத்தல், வாயில் நுரை தள்ளுதல், கண்கள் மேல் எழும்பி நிலை குத்தி நிற்பது என சில நொடிகள் முதல் சில நிமிடங்கள் வரை இதே நிலை நீடிக்கலாம்.

பொதுவாக 5 நிமிடங்களுக்குள் தானாகவே குணமாகி பழைய நிலைக்கு திரும்பிவிடுவர். காய்ச்சல் துவங்கிய 24 மணி நேரத்திற்கு ஒருமுறை மட்டுமே இந்த வலிப்பு வரும்.

குழந்தை பருவத்தில் 6 மாதம் முதல் 5 வயது வரை இதற்கான வாய்ப்புண்டு. இச்சூழலில் பதற்றமடையாமல் அணுக வேண்டும். வலிப்பு ஏற்படும் போது தடுக்கவோ, கையை கொண்டு அழுத்தம் தரவோ கூடாது.

அருகில் கடினமான, கூர்மையான பொருட்கள் இருக்கக்கூடாது. வாய் வழியே தண்ணீரோ, மருந்துகளோ ஊற்றக்கூடாது. இவை புரை ஏறி நுரையீரலுக்குள் செல்ல வாய்ப்பு உண்டு.

துவங்கிய நேரம் முதல் நீடிக்கும் நேரம் வரையிலான காலத்தை குறித்துக் கொள்ள வேண்டும்.

அடிக்கடி பாதிப்பு ஏற்பட்டால் இனிப்பு, கொழுப்பு , அசைவ உணவுகளை தவிர்க்க வேண்டும்.