இனி... போலிக் அமில மருந்து உள்கொள்ளும் அளவில் மாற்றம் !

உடலில் ரத்த சிவப்பணுக்களை மேம்படுத்தவும், அமினோ அமிலத்தின் அளவை குறைப்பதற்கும், 'பி9' சத்துக்கள் தேவைப்படுகின்றன.

இந்த சத்துக்களை, போலிக் அமில மருந்துகள் வழங்குகின்றன. பேறு காலத்தில் சிசுவுக்கு பிறவி குறைபாடு ஏற்படாமல் தடுப்பதிலும், போலிக் அமிலம் முக்கிய பங்கு வகிக்கிறது.

அப்போது, குறைந்த அளவில் மருந்தை, டாக்டர்கள் பரிந்துரைப்பர். அதே நேரம், நரம்பு குழாய் குறைபாடு உட்பட, பிற பாதிப்புகளுக்கு மருந்தின் அளவு அதிகரிக்கப்படும்.

அந்த அளவுகள் சீராக இல்லாதபட்சத்தில் மாரடைப்பு, பக்கவாதம், ரத்தசோகை உட்பட, பல்வேறு பாதிப்புகள் ஏற்படலாம்.

எனவே, மருந்தின் அளவீட்டில் மில்லி கிராமுக்கு பதிலாக, மைக்ரோ கிராம் அளவில் பரிந்துரைக்க, மத்திய மருந்து ஆலோசனைக் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன் வாயிலாக, தேவையின் அடிப்படையில் மிகக் குறைவான அளவிலிருந்து, இந்த மருந்து எடுத்துக் கொள்ளப்படும் நிலை ஏற்படும்.

இதையடுத்து, இனி போலிக் அமில மருந்துகள், மைக்ரோ கிராம் அளவில் விற்பனை செய்யப்படும்; 6 மாதங்களில் அமலாக்கப்படுமென மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.