ஸ்ரீரங்கம் கோவிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம்!

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம் மேற்கொண்டார்.

கோயிலுக்கு வந்த பிரதமர் மோடிக்கு பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.

கருடாழ்வார் மூலவர் தாயார் உள்ளிட்ட முக்கிய சன்னதிகளிலும், சக்கரத்தாழ்வார், கோதண்ட ராமர், ராமானுஜர் சன்னதிகளிலும் சாமி தரிசனம் செய்தார்.

ஸ்ரீரங்கம் கோயில் யானை ஆண்டாளிடம் ஆசி பெறும் பிரதமர் மோடி

ஆண்டாள் யானை பிரதமருக்கு மவுத் ஆர்கன் வாசித்துக் காண்பித்தது

ஶ்ரீ ரங்கநாதசுவாமி கோவிலில் வழிபாடு செய்யும் பாக்கியம் கிடைத்தது. இந்த கோவிலுடனான பிரபு ஶ்ரீராமரின் தொடர்பு நெடியது. - பிரதமர் மோடி

பிரபு ஸ்ரீ ராமர் வழிபட்ட கடவுளால் நானும் ஆசீர்வதிக்கப்பட்டதை பாக்கியமாக உணர்கிறேன். - பிரதமர் மோடி