பயணத்தை எளிமையாக்கும் டூர் டிப்ஸ்!
பிரெட், வாழைப்பழம், பி ஸ்கட், வீட்டில் செய்த முறுக்கு, சிப்ஸ் போன்றவற்றை சுற்றுலா செல்லும் போது எடுத்துச் செல்லுங்கள்.
அருகில் ஹோட்டலோ, உறவினர் வீடோ இல்லாத போது இவை கை கொடுக்கும்
லாட்ஜில் தங்குவது மாதிரி இருந்தால், 'பெட்ஷீட்' எடுத்து செல்வது அவசியம்.
அங்குள்ள கட்டிலின் மீது போட்டிருக்கும் விரிப்புகளின் மேலே போட்டு படுப்பதற்கும், கீழே விரித்துப் படுப்பதற்கும் இவை உதவும்.
எண்ணெய், 'பேஸ்ட்' மற்றும் முகத்துக்கு போடும் 'க்ரீம்' இவற்றை சிறிய அளவிலான 'பிளாஸ்டிக்' பையில் எடுத்து சென்றால், ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக ஒவ்வொன்று கொடுத்து விடலாம்
இஞ்சி முரப்பாவை, சிறிய 'பிளாஸ்டிக்' பையில் போட்டு எடுத்து செல்லலாம்.
இவை, உயரமான மலைப் பாதையில் பயணிக்கும் போது, சிலருக்கு ஏற்படும் வாந்தி, வயிற்றுப் புரட்டல் போன்றவைகளுக்கு, சாப்பிட கொடுக்கலாம்.
மலைபிரதேசங்களுக்கு செல்லும் போது கண்டிப்பாக, 'பிளாஸ்டிக்' பொருட்கள் (தட்டு டம்ளர், பைகள்) எடுத்துச் செல்வதை தவிர்க்கவும்
மொபைல் போனுக்கு 'சார்ஜர்' அல்லது 'பவர்-பேங்க்' ஆகியவற்றை கண்டிப்பாக எடுத்து செல்லவும்.