சத்துக்களை உறிஞ்ச நெய் உதவும்

பாரம்பரிய உணவுகளான, இட்லி, கோதுமை ரொட்டி, பருப்புக் கூட்டு, அவல் போன்றவை சிறந்த உணவுகள்.

உடல் எடையைக் குறைப்பதற்கென்று 'ஸ்பெஷல்' உணவைத் தேட வேண்டியதில்லை.

அரிசி சாதம், நெய், பருப்பு, வாழைப்பழம், மாம்பழம் போன்ற அந்தந்த பருவத்தில் கிடைக்கும் பழங்கள், பீர்க்கன்காய், கத்தரிக்காய், சுரைக்காய், புடலங்காய் போன்ற நாட்டு காய்கறிகளை சாப்பிடலாம்.

இதனால், உடலுக்குத் தேவையான ஊட்டச் சத்துக்கள் கிடைப்பதுடன், எடையும் குறையும்.

கேரட், பீன்ஸ் போன்ற ஆங்கில காய்கறிகளை, முடிந்தளவு தவிர்த்து விடலாம்.

கொழுப்புச் சத்துக்கள், உடலுக்கு அவசியம். நல்ல கொழுப்பு போதுமான அளவு உடலில் இருந்தால் தான், சாப்பிடும் உணவிலுள்ள நுண்ணுாட்டச் சத்துக்களை உறிஞ்சும் தன்மை கிடைக்கும்.

எனவே, தினமும் உணவில் நெய் இடம் பெற வேண்டும்.

இதில், 'ஒமேகா - 3, ஒமேகா - 9, விட்டமின் - ஏ, டி, இ, கே போன்ற பல ஊட்டச்சத்துகள் உள்ளதால், சாதம், ரொட்டியில் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்துக் கொள்வது நல்லது.