உடல் எடையை குறைக்கும் நல்ல மாவுச்சத்து!
அதிக கலோரி உடல் எடைக்கு காரணம். இதை தருவது கார்போஹைட்ரேட் மாவுச்சத்துள்ள உணவுகள். அவற்றை தவிர்க்க வேண்டும் என்று பொதுவாக ஆலோசனை தரப்படுகிறது.
ஆனால் மாவுச்சத்தில் நல்ல மாவுச்சத்து, கெட்ட மாவுச்சத்து என இரு வகைகள் உள்ளன என்பதை புரிந்துன் கொள்ள வேண்டும்.
பிஸ்கட், ரொட்டி, கேக், பேஸ்ட்ரி, நுாடுல்ஸ் என்று சுத்திகரித்து பதப்படுத்தி, பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உணவுகள் கெட்ட மாவுச்சத்து உடையவை.
இவற்றில் சர்க்கரை அதிக அளவில் இருக்கும். காய்கறிகளில் உருளைக் கிழங்கு, வாழைக்காய் இதில் சேரும்.
உமி நீக்கப்படாத முழு தானியங்கள், சிறு தானியங்கள் நல்ல மாவுச்சத்து உடையவை.
தலைமுறையாக நாம் இட்லி, தோசை, அரிசி சாதம் சாப்பிட்டே வளர்ந்திருக்கிறோம். வழக்கத்தில் இருந்த ஒன்றை தவிர்த்தால், ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படலாம்.
உடல் எடையை குறைக்கும் போது மாவுச்சத்தின் அளவு தான் முக்கியம். புரதம், நார்ச்சத்துடன் தேவைக்கு ஏற்ப நார்ச்சத்து உள்ள நல்ல மாவுச்சத்தும் சேர்க்க வேண்டும்.
ஆகவே வழக்கமான அரிசிக்கு பதிலாக கைக்குத்தல் அரிசி, பாரம்பரிய அரிசி வகைகள், சிறு தானியங்கள் சேர்க்கலாம். தனி நபரின் தேவை அடிப்படையில் தான் தேர்வு செய்ய வேண்டும்.