இதய ஆரோக்கியத்தை காக்கும் பிளம்ஸ் பழங்கள்
சிவந்த கவர்ச்சியான நிறமும், மிகுந்த இனிப்பு சுவையும்
கொண்டவை பிளம்ஸ் பழங்கள். ஏப்ரல், ஜூன் மாதங்களில் கொடைக்கானல், ஊட்டி
போன்ற மலை பிரதேசங்களில் அதிகம் விளைகிறது.
இதில் வைட்டமின் சி நிறைந்துள்ளதால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
இதில் வைட்டமின் ஏ, பீட்டா கரோட்டின் சத்துகள் அதிகளவில் உள்ளன; பார்வைத்திறனுக்கு மிக அவசியமானது.
இதிலுள்ள பொட்டாசியம் சத்து ரத்த அழுத்தம் மற்றும் இதய துடிப்பை கட்டுக்குள் வைத்து, இதய ஆரோக்கியத்தை காக்க உதவுகிறது.
ஆன்டிஆக்ஸிடென்ட்கள் மற்றும் வைட்டமின்கள் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
எளிதில்
ஜீரணமாகும் நார்ச்சத்துகள், ஜீரண மண்டலத்தை நன்கு செயல்பட வைக்கும்.
மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் தருகிறது; குடல் ஆரோக்கியத்தை
மேம்படுத்துகிறது.
வைட்டமின் கே மற்றும் பொட்டாசியம் எலும்புகளை வலுப்படுத்துகின்றன.