பிறந்த குழந்தைக்கு முத்தம் கொடுப்பது சரியா?

பெற்றோர்கள் முத்தங்களின் மூலம் குழந்தைகளிடம் பாசத்தை வெளிப்படுத்துவது இயல்பானதே.

ஆனால், புதிதாகப் பிறந்த குழந்தைகளின் முகத்திலோ, உதடுகளிலோ முத்தமிடும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டியதும் அவசியம்.

முத்தம், அன்பின் வெளிபாடாக கருதப்பட்டாலும், குழந்தைகளுக்கு... குறிப்பாக உதடுகளில் முத்தமிடுவது, கடுமையான உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்.

புதிதாகப் பிறந்த குழந்தைகள் தொற்றுநோய்களுக்கு எளிதில் பாதிக்கப்படுவர். அதேவேளையில், அனைத்து தடுப்பூசிகளையும் எடுத்திருக்க வாய்ப்பில்லாததால், எளிதில் பாதிக்கப்படுவர்.

எனவே, குழந்தையின் உதடு, முகத்தில் முத்தமிடும்போது காய்ச்சல் போன்ற பல சுவாச நோய்கள் பரவும் அபாயமுள்ளது.

ஏற்கனவே நீங்கள் பாதிக்கப்பட்ட நிலையில், உங்களின் உமிழ்நீரில் இருந்து ஹெபடைடிஸ் பி பரவ வாய்ப்புள்ளது. குறிப்பாக தடுப்பூசி போடப்படாத நிலையில் எளிதாக பாதிக்கப்படக்கூடும்.

எனவே, சளி இருமல், காய்ச்சல் பாதிப்பு இல்லாவிட்டால், நெற்றி, கை, கால் போன்ற மற்ற உடல் பாகங்களில் முத்தமிட்டு உங்கள் அன்பை வெளிப்படுத்தலாம்.

13 வயதுக்குட்பட்டர்கள், உடன் பிறந்தவர்கள், பள்ளி செல்லும் போது குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி காரணமாக நோய் தொற்று ஏற்பட்டாலும், பிறந்த குழந்தை பாதிக்க வாய்ப்புள்ளது.

குழந்தையின் சருமம் மிகவும் உணர்திறன் கொண்டது. உங்களின் லிப்ஸ்டிக்கில் உள்ள ரசாயனங்கள் குழந்தைக்கு எரிச்சல் போன்ற பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.