குழந்தைகளிடையே அதிகரித்து காணப்படும் சைலன்ட் சீசரஸ்!

சைலன்ட் சீசரஸ் என்பது குழந்தைகளிடம் காணப்படும் ஒருவகை வலிப்பு நோய் (epilepsy). தற்போது குழந்தைகள் மத்தியில் அதிகரித்து உள்ளது என டாக்டர்கள் கூறுகின்றனர்.

வகுப்பறையில் பாடம் நடக்கும் சமயத்தில் எந்த சலனமும் இல்லாமல், பகல் கனவு காண்பது போல ஒரே இடத்தில் பார்வை நிலைகுத்தி, பாடத்தில் கவனம் இல்லாமல், வேறு உலகத்தில் இருப்பர்.

சில வினாடிகள் எங்கே இருக்கிறோம், என்ன செய்கிறோம் என்ற நினைப்பே இருக்காது.

சில சமயங்களில் கண் இமைகள் படபடக்கும், உதடுகளைக் கடிப்பர். கைகளை தேய்ப்பதும் உண்டு. அபூர்வமாக சில குழந்தைகள் பற்களை இறுகக் கடிப்பார்கள்.

இந்த அறிகுறிகள் அனைத்தும் 10 - 20 வினாடிகள் மட்டுமே இருக்கும். குழந்தை கண் அசைவு இல்லாமல், கொஞ்ச நேரத்திற்கு அப்புறம் ஒன்றும் நடக்காதது போல இருக்கும்.

சைலன்ட் சீசர்ஸ் தொடர்ச்சியாக வரும் குழந்தைகள், வளர்ந்த பின், 'ஏடிஹெச்டி' எனப்படும் கவனம் செலுத்துவதில் சிரமம், அதீத செயல்பாடு வர வாயப்புணடு.

'ஏடிஹெச்டி' இருந்தால், பின்னாளில் சைலன்ட் சீசர்ஸ் வரவும் வாய்ப்புண்டு. இரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது.

ஏற்கனவே சைலன்ட் சீசர்ஸ், ஏடிஹெச்டி கோளாறு இருக்கும் குழந்தைகள், மொபைல் போனில் அதிக நேரம் செலவிடும் போது, பிரச்னைகளை மேலும் தீவிரப்படுத்தலாம்.