பருப்புகளில் பிஸ்தா என்றும் பிஸ்தா தான்... நன்மைகள் அறிவோமா!

பிஸ்தா பருப்பில் புரதம், கொழுப்புச் சத்து, இரும்புச் சத்து, சுண்ணாம்புச்சத்து, துத்தநாகச்சத்து, டோகோபெரால், கரோட்டின்கள், வைட்டமின் -பி என பல மருத்துவ கூறுகளை கொண்டது,

ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்த பருப்பு வகைகளில், பிஸ்தா தனித்துவம் வாய்ந்தது. கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் பிஸ்தா பருப்பு அதிமுக்கிய பங்கு வகிக்கிறது.

நினைவுத் திறன், ஒருங்கிணைப்பு போன்ற மூளையின் செயல்பாடுகளுக்கு பிஸ்தா துணை நிற்கும். இதிலுள்ள வைட்டமின் -ஈ, வயது மூப்பு காரணமாக ஏற்படும் பிரச்னைகளை தள்ளிப்போட உதவும்.

கூந்தல் அடர்த்தியாக வளரவும், மிருதுவான சருமத்துக்கும், ரத்த சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைக்கவும், எலும்புகளுக்கு வலுவூட்டவும், நோய் எதிர்ப்பாற்றலை கூட்டவும் பிஸ்தா நல்லது.

கெட்ட கொழுப்பை தடுக்கும் ஆற்றல் இருப்பதோடு, நிறைவுறாத கொழுப்பு அமிலங்களையும் அதிகம் கொண்டது, பிஸ்தா.

வீரியம் அதிகரிக்கும் மருந்துகளில் பிஸ்தாவின் சேர்மானம் இருப்பது குறிப்பிடத்தக்கது. சத்து மாவுக் கலவைகளில் பிஸ்தாவை அரைத்துச் சேர்த்து மதிப்பூட்டலாம்.

குடல் புற்றுநோய்க்கான தடுப்பு மருந்தாகவும் பிஸ்தா செயல்படுவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. உடலுக்குள் ஏற்படும் நுண்ணிய காயங்களை ஆற்றும் வல்லமை பிஸ்தாவுக்கு இருக்கிறது.