இணையத்தை கலக்கும் கொய்யாப்பழ சட்னி... நொடியில் செய்யலாம் !
கொய்யாப்பழத்தில் வைட்டமின் சி, வைட்டமின் பி6, புரதச்சத்து, நார்ச்சத்து, கால்சியம், இரும்பு என பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
இப்படி பல நன்மைகள் நிறைந்த இதில் செய்யப்படும் சட்னி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதெல்லாம் தேவை... கொய்யாப் பழம் - 2, பூண்டு - 10 பற்கள், மல்லி இலை - ஒரு கைபிடி , பச்சை மிளகாய் - 4, இஞ்சி - ஒரு துண்டு, சீரகம் - ஸ்பூன், எலுமிச்சை பழம் - அரை, உப்பு - தேவையான அளவு
ஸ்டெப் 1 : கொய்யாப்பழத்தை கழுவி, சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
ஸ்டெப் 2 : அதை ஒரு மிக்ஸி ஜாரில் கொத்தமல்லி இலைகளையுடன் சேருங்கள்.
ஸ்டெப் 3 : அடுத்ததாக அதில் சீரகம், தோல் சீவிய இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து எலுமிச்சை சாறையும் பிழிந்து விடவும்
ஸ்டெப் 4 : தண்ணீர் சேர்க்காமல், நன்கு நைஸாக அரைத்து எடுத்தால் சுவையான கொய்யாப்பழ சட்னி ரெடி.