மகிழ்ச்சி என்பது... லியோ டால்ஸ்டாயின் தன்னம்பிக்கையூட்டும் வரிகள் !

அனைவரும் உலகை மாற்ற நினைக்கிறார்கள்; ஆனால் யாரும் தன்னை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.

மகிழ்ச்சி என்பது வெளிப்புற விஷயங்களைச் சார்ந்தது அல்ல. அவற்றை நாம் எப்படிப் பார்க்கிறோம் என்பதைப் பொறுத்தே உள்ளது.

நீங்கள் முழுமையைத் தேடினால், எப்போதும் திருப்தியடைய மாட்டீர்கள்.

பொறுமை மற்றும் நேரம் ஆகிய இரண்டு மட்டுமே சக்தி வாய்ந்த வீரர்கள்.

மகிழ்ச்சியான தருணங்களைக் கைப்பற்றுங்கள்.. அன்பு செலுத்துங்கள்.. நேசிக்கப்படுங்கள்... உலகில் ஒரே யதார்த்தம் இதுதான். மற்ற அனைத்தும் முட்டாள்தனம்.

துன்பம் என்பது இல்லாவிட்டால், மனிதன் தன் எல்லைகளை அறியமாட்டான், தன்னையும் அறியமாட்டான்.