வாய்ப்புக்காக காத்திருக்காதே... அப்துல் கலாம் பொன்மொழிகள்!

நம் எல்லோருக்கும் சமமான திறமை இருப்பதில்லை. ஆனால், நமக்கு உள்ள திறமைகளை வளர்த்தெடுக்கச் சமமான வாய்ப்புகள் கிடைத்துள்ளன.

நம்பிக்கை நிறைந்த ஒருவர் யார் முன்னேயும் எப்போதும் மண்டியிடுவதில்லை.

வாய்ப்புக்காக காத்திருக்காதே; வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொள்!

ஒரு முறை வந்தால் அது கனவு, இரு முறை வந்தால் அது ஆசை, பல முறை வந்தால் அது இலட்சியம்.

கனவு காணுங்கள்! கனவு என்பது தூக்கத்தில் வருவது அல்ல, உங்களை தூங்கவிடாமல் எது செய்கிறதோ அது தான் கனவு.

வெற்றி பெற வேண்டும் என்ற பதட்டம் இல்லாமல் இருப்பது தான் வெற்றி பெற சிறந்த வழி.

நீங்கள் சூரியனைப் போல பிரகாசிக்க வேண்டும் என்றால் முதலில் சூரியனைப் போல எரியக் கற்றுக்கொள்ள வேண்டும்.