உலகில் அதிகளவு பனி விழும் நாடு இதுதான்..!

உலகில் அதிகமாக பனி பொழியும் நாடு எது என்றால் சட்டென நினைவுக்குவருவது ஐஸ்லாந்து, பிரிட்டன், ரஷ்யா, கனடா.

ஆனால் இதைவிட அதிகளவு பனி கொட்டும் நாடு ஜப்பான் என்றால் பலராலும் நம்ப முடியாது.

ஜப்பானில் அமோரி, சப்போரோ, டொயாமா, ஆகிய நகரங்களில் 7.92 மீ பனிப்பொழிவு உள்ளது.

1927ல் ஜப்பானின் இபூகி மலையில் 1182 செ.மீ., அளவு பனிப்படலம் இருந்தது. உலகில் அதிக அடர்த்தி கொண்ட பனிப்படலம் இதுவே.

கடந்த 100 ஆண்டுகளாக பனிப்படலங்களுள் இபூகி பனிப்படலமே முதன்மை வகிப்பது குறிப்பிடத்தக்கது.

ஜப்பானின் 51 சதவீத நிலப்பகுதியில் பனிப்படலம் ஏற்படுவதால் பனிகாலத்தில் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படுகிறது.

பனிச்சரிவு அபாயம் அடிக்கடி ஜப்பான் அரசால் விடுக்கப்படும். பொது மக்களின் கார்களில் பனிப்படலம் ஏற்பட்டு அதில் கார்கள் முழுகி விடும்.