பா.ஜ.,வுடன் தனது சமத்துவ மக்கள் கட்சியை இணைத்தார் சரத்குமார்.

கடந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேர்தலை சந்தித்தது சமத்துவ மக்கள் கட்சி.

எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் பாஜ.,வுடன் கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாக சரத்குமார் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் சமத்துவ மக்கள் கட்சியை பாஜ.,வுடன் சரத்குமார் இணைந்துள்ளது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வருங்கால இளைஞர்களின் நலனுக்காகவும், தேசிய நலனுக்காகவும் இந்த முடிவை நான் எடுத்தேன். - சரத்குமார்

பிரதமர் மோடி தலைமையிலனா ஆட்சியில் பொருளாதார வளர்ச்சி, இளைஞர்களின் நலன் நன்றாக அமைந்துள்ளது. - சரத்குமார்

2026ல் தமிழகத்தில் இந்த கட்சி போட்டியிட்டு வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும். வலிமையான ஆட்சியை மீண்டும் தரும். இது மக்களுக்கான முடிவு. - சரத்குமார்

தமிழகத்திற்குள் சரத்குமாரை அடைத்து வைக்க விரும்பவில்லை. அதே நேரத்தில் சரத்குமார் தேசிய அரசியலுக்கு தேவைப்படுகிறார். - தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை