நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்கள் கவனிக்க வேண்டிய மூன்று விஷயங்கள்
நீரிழிவு பாதிப்பை கட்டுக்குள் வைத்திருந்தால் நமக்கு எவ்வித தொல்லையும் வராது. இதற்கான சில குறிப்புகளை பார்க்கலாம்.
ரத்த நாளங்கள் எனும் ரத்தக்குழாயை தெளிவாக, நலமுடன் வைத்துக் கொள்ள வேண்டும். அதற்கு, 'ABC' மற்றும் அதற்கான அளவுகள் குறித்து தெரிந்திருக்க வேண்டும்.
'A' என்றால் 'ஏ1சி' எனப்பொருள். மூன்று மாத சர்க்கரை அளவின் சராசரியை குறிப்பதே 'ஏ1சி'. 'B' என்பது 'பிளட் பிரஷர்,' 'C' என்பது கொலஸ்ட்ரால்.
இந்த மூன்றையும், முறையாக பராமரித்தால் மாரடைப்பு, வாதம், பார்வையிழப்பு, சிறுநீரகப்பழுது, கால் இழப்பு ஆகியவற்றை தவிர்க்கலாம்.
நீரிழிவு பாதிப்பு உள்ளவர்களுக்கு, வெறும் வயிற்றில் சர்க்கரை அளவு, 80 - 130 க்குள், உணவு உட்கொண்ட பின் 2 மணி நேரம் கழித்து, 180 க்குள் இருக்க வேண்டும்.
'ஏ1சி' எனும் 3 மாத சர்க்கரை அளவின் சராசரி, 7 சதவீதத்துக்குள் இருக்க வேண்டும். இதை பராமரித்தால் சர்க்கரையால், ரத்தகுழாய்க்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது.
'B' எனும் பிளட் பிரஷர், குறைந்தபட்சம் 140/90 என்ற அளவில் இருக்க வேண்டும். குறிப்பாக, 40 வயதுக்கு மேற்பட்டவர்கள், 'C' எனும், கொலஸ்ட்ராலை பராமரிக்க வேண்டும்.
எல்.டி.எல்., எனும் கெட்ட கொலஸ்ட்ரால், 70க்கு கீழ் இருக்க வேண்டும். எச்.டி.எல்., எனும் நல்ல கொலஸ்ட்ரால், ஆண்களுக்கு, 40 க்கு மேல், பெண்களுக்கு, 50 க்கு மேல் இருக்க வேண்டும்.
இந்த ஐந்து அளவுகளையும் முறையாக பாராமரித்து வந்தால், நீரிழிவு பாதிப்பு இருந்தாலும் நலமான வாழ்க்கையை வாழ முடியும்.