வெள்ளி முதல் வியாழன் வரை (13.1.2023 - 19.1.2023) இந்த வாரம் எந்த ராசிக்கு என்ன பலன்....!

மேஷம்... சிந்தித்து செயல்பட்டு லாபம் காண்பீர். உங்களின் எதிர்பார்ப்பு நிறைவேறும். சூரிய வழிபாடு நன்மை அளிக்கும்.

ரிஷபம்... உங்கள் செயல்களில் அதிக உழைப்பு தேவைப்படும். குடும்ப நலனில் அக்கறை அதிகரிக்கும். உங்கள் முயற்சி எளிதாக நிறைவேறும் வாரம் இது. மகாலட்சுமி வழிபாடு வளம் தரும்.

மிதுனம்... குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தீராமல் இருந்த பிரச்னைகளில் தீர்வு ஏற்படும். பொருளாதார நிலை உயரும். விஷ்ணு வழிபாடு நன்மை தரும்.

கடகம்... உங்கள் திறமை வெளிப்படும் வாரம் இது. நீங்கள் நினைத்ததை அடைவீர்கள். உங்கள் செயல்கள் வெற்றியாகும். நவகிரகங்களை வழிபட சங்கடம் விலகும்.

சிம்மம்... இந்த வாரம் உங்கள் எண்ணம் எளிதாக நிறைவேறும். முயற்சியில் முன்னேற்றம் காண்பீர்கள். திருச்செந்தூர் முருகனை மனதில் எண்ணி செயல்பட நன்மை அதிகரிக்கும்.

கன்னி... குடும்ப நலனில் அக்கறை செலுத்துவீர்கள். நினைத்ததை செய்வீர்கள். செலவுகள் அதிகரித்தாலும் அதற்கு ஏற்ப வரவு உண்டாகும். ரங்கநாதரை மனதில் எண்ணி வழிபடுங்கள்.

துலாம்... செயலில் தடுமாற்றமும், செலவுகளும் உண்டாகலாம் என்பதால் கவனம் தேவை. அலைச்சல் அதிகரிக்கும். விநாயகரை வழிபட வளமும் நலமும் அதிகரிக்கும்.

விருச்சிகம்... உங்கள் முயற்சிகளில் இருந்து வந்த தடை விலகும். சுறுசுறுப்பாக செயல்பட்டு உங்கள் செல்வாக்கை உயர்த்துவீர்கள். பொருளாதார நெருக்கடிக்கு வாய்ப்புள்ளது. வராகியை வழிபட சங்கடம் தீரும்.

தனுசு... பணியில் ஏற்பட்ட பிரச்னை விலகும். எதிர்பார்த்த நன்மை உண்டாகும். வாரத்தின் பிற்பகுதியில் அலைச்சலும், செலவும் அதிகரிக்கும். ஆலங்குடி குரு பகவானை மனதில் எண்ணி வழிபட நன்மை உண்டாகும்.

மகரம்... முயற்சிகளால் வெற்றி பெற வேண்டிய வாரம் இது. எதிர்பார்ப்புகள் நிறைவேறும். தடைகளைத் தாண்டி நினைத்ததை சாதிப்பீர்கள். சனீஸ்வரரை வழிபட சங்கடம் விலகும்.

கும்பம்... சுறுசுறுப்பாக செயல்பட்டு லாபம் காண்பீர்கள். நினைத்ததை செயல்படுத்துவீர்கள். எதிலும் விழிப்புணர்வு அவசியம். சிவனை வழிபட சங்கடம் தீரும்.

மீனம்... ஆரோக்கியத்தில் கூடுதல் அக்கறை செலுத்துங்கள். திட்டமிட்டு செயல்பட்டால், எதிர்ப்புகளை சமாளிக்கலாம். தட்சிணாமூர்த்தியை வழிபடுங்கள்.