தேர்வு முடிவால் வேண்டாம் மன உளைச்சல்.. தோல்வியும் கடந்து போகும்...

பனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இதேபோல் மே 19ல் பத்தாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வர உள்ளன.

பிளஸ் 2 ,பத்தாம் வகுப்பு பொது தேர்வுகளில் தோல்வி அடையும் மாணவர்கள் உடனடி தேர்வு மூலம் வெற்றி அடையலாம்.

மதிப்பெண்களை பொறுத்து வாழ்க்கை அமையப்போவது இல்லை என்ற நடைமுறை வாழ்வியலை கற்றுக்கொள்ள வேண்டும்.

தன்னம்பிக்கையுடன் எதிர்காலத்தை கையாள ஆசிரியர்கள், பெற்றோர்கள் அறிவுறுத்த வேண்டும்.

தேர்வு முடிவுகள் வெளிவந்தவுடன் பெற்றோர்கள், மாணவர்களுக்கு நேர்மறை எண்ணங்களை உருவாக்க வேண்டும்.

மன உளைச்சலில் உள்ள மாணவர்களை கண்டறிந்து தகுந்த ஆலோசனை வழங்க வேண்டும்.