இன்று உலக நடன தினம்

சர்வதேச தியேட்டர் நிறுவனம், ஐ.நா.,வின் யுனெஸ்கோ அமைப்பின் சார்பில் ஏப். 29ல் உலக நடன தினம் கொண்டாடப்படுகிறது.

நடனம் ஒரு சிறந்த கலை. இது மனதிற்கும் உடலுக்கும் புத்துணர்ச்சி அளிக்கிறது.

நடனத்தில் பங்கேற்பது, அதை கற்றுக்கொடுப்பது, அவர்களது திறமையை அங்கீகரிப்பதே இத்தினத்தின் நோக்கம்.

பிரான்ஸ் நடனக் கலைஞர் ஜான் ஜார்ஜ் நுாவர், பாலே நடனக் கலையில் சிறந்து விளங்கியவர்.

இவரை கவுரவிக்கும் விதமாக இவரது பிறந்த தினம் (ஏப். 29) உலக நடன தினமாக கொண்டாடப்படுகிறது.

மேலும் இத்தினம் நடனம் மற்றும் அதன் கலாச்சாரம், முக்கியத்துவம் குறித்து உலகிற்கு வெளிப்படுத்த உதவுகிறது.