ஹேப்பி பர்த்டே த்ரிஷா

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக கோலிவுட்டில் கோலோச்சி வருபவர் திரிஷா. தமிழ் சினிமா உலகில் தேவதையாக உலா வருகிறார்.

விக்ரமின் சாமி படத்தில் மாமியாக வந்த இவர், விஜய்யின் கில்லி படத்தில் தனலட்சுமியாக அனைவரிடமும் ஒட்டிக்கொண்டார்.

தடுமாறிய நேரத்தில் '96' படத்தில் ஜானுவாக மீண்டும் அனைவரின் உள்ளத்தையும் கொள்ளை கொண்டார்.

தொடர்ந்து முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்து வரும் நிலையில், 'பொன்னியின் செல்வன்' படத்தின் மூலம் மீண்டும் அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளார்.

இதில், புத்திசாலித்தனமும், சமயோஜித அறிவுடனும் கூடிய பேரழகி குந்தவை கதாப்பாத்திரத்தில் நடித்த இவர், நிஜ வாழ்க்கையிலும் மாடர்ன் குந்தவையாகவே உலா வருகிறார்.

'பொன்னியில் செல்வன்' படத்துக்கு பலத்த வரவேற்பு கிடைத்த நிலையில், செல்லும் இடமெங்கும் த்ரிஷாவை குந்தவை என்றே ரசிகர்கள் வரவேற்கின்றனர்.

இதற்கேற்ப பட புரமோஷன் நிகழ்ச்சிகளில் விதவிதமான அழகிய உடைகளில் தேவதையாக உலாவந்து, பலரையும் வசீகரித்துள்ளார்.

சல்வார், புடவை என ஆர்பாட்டமில்லாத, பாரம்பரியம் மற்றும் ஸ்டைலிஷ் லுக்கில் அனைவரையும் அசர வைக்கிறார் த்ரிஷா.

இன்று இவருக்கு பிறந்தநாள் என்பதால் பலரும் வாழ்த்து தெரிவித்து, சோஷியல் மீடியாவில் டிரெண்டிங் ஆக்கி வருகின்றனர்.