நீண்ட காலமாக வங்கிக்கணக்குகளை பயன்படுத்தவில்லையா? உஷாரா இருங்க!
நீண்ட காலமாக செயல்படாத வங்கி கணக்குகள் அதிகளவில் இருப்பது, நாட்டின் நிதி அமைப்பின் வெளிப்படை தன்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
இத்தகைய
கணக்குகள் மூலம் பணமோசடி, ஹவாலா பரிவர்த்தனை, ஆன்லைன் மோசடி போன்ற
சட்டவிரோத செயல்கள் எளிதாக நடக்க வாய்ப்புள்ளதாக சைபர் பிரிவு அதிகாரிகள்
அறிவுறுத்தியுள்ளனர்.
குறிப்பாக பயன்படுத்தாமலுள்ள மகளிர் சுய உதவிக்குழு மற்றும் கல்லுாரி மாணவர்களின் வங்கி கணக்குகள் மூலம் மோசடிகள் நடக்கின்றன.
பலர் அறியாமலேயே சிறிய கமிஷன் பெறுவதற்காக தங்களது வங்கி
கணக்குகளை பிறருக்கு பயன்படுத்த அனுமதிப்பதால், மோசடி வழக்குகளில்
அவர்களும் சிக்கிக்கொள்வது அதிகரித்துள்ளது.
ஒன்றுக்கு மேற்பட்ட வங்கி கணக்குகளை வைத்திருப்பவர்கள், பயன்படுத்தப்படாத கணக்குகளை உடனடியாக மூடுவது பாதுகாப்பானது.
பொதுவாக, 2 ஆண்டுகளுக்கு மேலாக செயல்படாத கணக்குகள் தானாக முடக்கப்படுகின்றன. தற்போது, ஓராண்டுக்கு மேலாக பயன்படுத்தப்படாத கணக்குகளை மூட ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.
முடக்கப்பட்ட கணக்குகளை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர
கே.ஒய்.சி., ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டியது அவசியம். ஆனால் முழுமையாக
மூடப்பட்ட கணக்குகளை மீண்டும் பயன்படுத்த இயலாது.