விபத்தில் தலையில் காயமா? சிறிதாக இருந்தாலும் அலட்சியம் கூடாது!
எதிர்பாராத விபத்துக்களால் தலையில் ஏற்படும் காயத்தை கவனத்துடன் கையாள வேண்டும்.
வெளிக்காயம் ஏதும் இல்லை என நினைத்து அலட்சியமாக விடக் கூடாது. தலையின் உள்பகுதியில் ரத்தக் கசிவு, எலும்பு முறிவு ஏற்பட வாய்ப்புள்ளது.
ஆரம்பத்தில் எந்த பாதிப்பும் தெரியவில்லை என்றாலும் நாளடைவில் பாதிப்பை ஏற்படுத்தும். இதன் அறிகுறியாக தலைவலி, குமட்டல், தலைச்சுற்றல் ஏற்படும்.
அதை கவனிக்காமல் விட்டால் நரம்பு தொடர்பான வலிப்பு, பக்கவாதம் உள்ளிட்ட பாதிப்பு ஏற்படும். சில நேரங்களில் கோமாவிற்கு செல்ல கூட வாய்ப்புள்ளது.
விபத்து ஏற்பட்டவுடன் சுயமாக முடிவு எடுக்காமல் டாக்டரை அணுகி பரிசோதனை செய்துக் கொள்ள வேண்டும்.
காயமில்லாமல் வீக்கம் இருந்தால் ஐஸ்கட்டி மூலம் மசாஜ் செய்ய வேண்டும். இதனால், எதிர்காலத்தில் தலை சம்பந்தமான பிரச்னைகளில் இருந்து தற்காத்துக் கொள்ளலாம்.