ஜீரணத்திற்கு உறுதுணையாகும் கொத்தமல்லி!
பச்சை கொத்தமல்லி வாயுவை போக்க, பித்தத்தை தணிக்க, உடல் சூட்டை குறைக்க, நஞ்சை முறிக்க, போதையை தீர்க்க, இதய பலத்தை பெருக்க சிறந்த மருந்தாகும்.
இதில் நார்ச்சத்து, வைட்டமின் ஏ, பி, பி1, சி, ஈ என, பல வைட்டமின் சத்துக்கள், இரும்புச்சத்து, கால்சியம், மாவுச்சத்து, கொழுப்புச்சத்து உள்ளன.
ஜீரணத்திற்கு உறுதுணையாகவும், அஜீரணம், வாயு மற்றும் அமிலத்தன்மை போன்ற பிரச்னைகளை நீக்கி, வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது.
இந்த இலைகளை உட்கொள்வதன் மூலம், உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைக்கலாம். அதுமட்டுமின்றி வேகமாக அதிகரிக்கும் உடல் எடையையும் இது கட்டுப்படுத்தும்.
கொத்தமல்லி இலையில், 'டோடேசெனால்' என்ற ரசாயனப் பொருள் உள்ளது. இது, உணவு, 'புட் பாய்சன்'ஆவதற்கு காரணமான கிருமியை கொன்று விடும்.
மார்பக புற்றுநோயைக் கட்டுப்படுத்த, கொத்தமல்லியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.
இன்சுலின் செயல்திறனை அதிகரிக்கிறது, கொத்தமல்லி. இது, உடலில் ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவுகிறது.