நோய்களை போக்கும் வேப்பிலையின் மகத்துவம் அறிவோமா!

வேப்பம் பூவை ரசம் வைத்து, உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால், பித்தம் சம்பந்தப்பட்ட நோய்கள் தீரும்

வேப்பிலையை அரைத்து முகப்பரு உள்ள இடத்தில் பூசினால், முகப்பரு மறைந்து, முகம் பொலிவு பெறும்.

வேப்ப இலையை அரைத்து புண் மற்றும் கட்டி உள்ள இடத்தில் பற்றுப் போட்டால், புண் விரைவில் ஆறும்

வேப்ப இலையுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து, உடல் முழுவதும் தேய்த்து, சிறிது நேரம் கழித்து குளித்தால், உடம்பில் உள்ள கொப்புளங்கள் பொரிந்து விடும்.

வேப்பிலையை பச்சையாக வெறும் வயிற்றில் சாப்பிட்டால், சர்க்கரை நோயாளிகளுக்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையும்.

வேப்பங்கொழுந்து பொடியுடன், அதிமதுர பொடியை சேர்த்து, நீர் விட்டுக் கலந்து உலர வைக்கவும்.

உலர்ந்ததும் உருண்டைகளாக உருட்டி, தினமும், மூன்று வேளை உட்கொள்ளவும். இப்படி செய்துவர, அம்மை நோய் விரைவில் உடலை விட்டு அகலும்

வேப்பிலையை அரைத்து அதனுடன் எலுமிச்சை சாறு கலந்து, தலைக்கு தேய்த்து குளித்து வந்தால், பித்த மயக்கம் தெளியும்

தினமும் காலை, வெறும் வயிற்றில், சிறிது வேப்பங்கொழுந்துடன், ஐந்து மிளகு சேர்த்து சாப்பிட்டு வர, வைரஸ் காய்ச்சலாக இருந்தாலும் குணமாகும்.