படபடக்கும் இதயம்... காரணங்களும் சிகிச்சை முறையும்...

மன அழுத்தம், உடற்பயிற்சி, அளவுக்கு அதிகமாக காபி உட்பட காபின் கலந்த பானங்கள் குடிப்பதால், இயல்பைவிட வேகமாக இதயம் துடிக்கலாம்.

அதே நேரம் ஓய்வாக இருக்கும் போதும், இதயம் நிமிடத்திற்கு 100 முறைக்கு மேல் துடித்தால், 'டாக்கி கார்டியா' எனப்படும் தீவிர இதய நோயின் அறிகுறியாக இருக்கலாம்.

மூச்சுத் திணறல், தலை சுற்றல், மார்பு வலி போன்ற அறிகுறிகளுடன் இதயத் துடிப்பு குறையாமல் இருந்தால், இதயத்தில் ஏதோ கோளாறு இருக்கலாம்.

சிகிச்சை பெறுவதில் தாமதம் செய்தால், பக்கவாதம், இதயச் செயலிழப்பு, மாரடைப்பு போன்ற சிக்கல்கள் ஏற்படலாம்; உயிருக்கு ஆபத்தாகவும் முடியலாம் என டாக்டர்கள் கூறுகின்றனர்.

இயல்பைவிட வேகமாக இதயம் துடித்தால், அளவுக்கு அதிகமாக வேலை செய்கிறது என்று அர்த்தம்.

ஈசிஜி பரிசோதனை செய்தால், இதயத்தின் மின் செயல்பாட்டை அறியலாம். பிரச்னை இருந்தால், மருந்து, மாத்திரைகள் மூலம் சரி செய்யலாம்.

தீவிர கோளாறு என்றால், ஐசிடி எனப்படும் சிறிய சாதனத்தை அறுவை சிகிச்சை மூலம் மார்பில் பொருத்தலாம். இது, ஒழுங்கற்ற இதயத் துடிப்புகளை தொடர்ந்து சரி செய்யும்.