ரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைக்க உதவும் 5 எஸ் !

ரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்க, அதனுடன் தொடர்புடைய ஐந்து, 'எஸ்'களை அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.

'எஸ் 1' - சர்க்கரை... குறிப்பாக வெள்ளைச் சர்க்கரையை, முற்றிலும் தவிர்க்க வேண்டியது அவசியம்.

'எஸ் 2' - சிகரெட்... புகை பிடிக்கவே கூடாது. அந்த பழக்கம் இருப்பவர்கள், முற்றிலும் அதிலிருந்து மீள்வதற்கு முயற்சி செய்ய வேண்டும்.

'எஸ் 3' - சால்ட் எனப்படும் உப்பு... எவ்வளவு குறைவாக பயன்படுத்த முடியுமோ, அந்தளவுக்கு உப்பை குறைவாக பயன்படுத்த வேண்டும்.

'எஸ் 4' - 'ஸ்மைல்' என்ற புன்னகை... எப்போதும் அமைதியான மனநிலையில், அனைத்தையும் புன்னகையுடன் எதிர்கொள்ள பழக வேண்டும்.

'எஸ் 5' - 'ஸ்லீப்' அதாவது துாக்கம்... தனி நபரின் தேவையை பொறுத்து, 6 - 8 மணி நேரம் வரை, ஆழ்ந்த துாக்கம் மிகவும் அவசியமானது.

இந்த ஐந்து எஸ்களை பின்பற்றினால், ரத்தத்திலுள்ள சர்க்கரை அளவை நம் கட்டுக்குள் வைக்கலாம்.