பீட்ரூட்டில் நிறைந்திருக்கும் ஊட்டச்சத்துக்கள் அறிவோமா!

பீட்ரூட்டின் சிவப்பு நிறம் பீட்டாலைன்ஸ் எனப்படும் சிவப்பு நிறமிகளால் ஏற்படுகிறது. பொட்டாசியம், இரும்பு, வைட்டமின் சி போன்ற அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்கள் அதிகமாக உள்ளது.

பீட்ரூட் சாற்றில் பொதுவாக அதிகளவு நைட்ரேட்டுகள் இருக்கிறது. இது ரத்த நாளங்களில் உள்ள பிரச்னைகளை சரி செய்து, ரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.

பீட்ரூட், ஜூஸ், பொறியல், பச்சையாக என எந்த வகையிலும் உட்கொள்ளலாம். குறிப்பாக ஜூஸாக குடிப்பவர்களுக்கு தசையின் வலிமை அதிகரிக்கிறது.

மேலும் ஒரு நாளின் தொடக்கத்தில் இதனை எடுத்து கொள்ளும் போது, அதிக உணவை உட்கொள்ளாமல், உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தும் ஆற்றலும் அதிகரிக்கிறது.

தினமும் பச்சையாக பீட்ரூட்டை சாப்பிடும் போது, ரத்த சோகை போன்றவற்றை கையாள பயனுள்ளதாக இருக்கும்.

இதில் காணப்படும் பீட்டானின் என்ற வேதிப்பொருள், உடலில் ஆக்ஸிஜனேற்ற புரதங்களின் உற்பத்தியைத் தூண்டுகிறது.

இதன் நச்சு நீக்கும் பண்பு முகத்தில் பருக்கள் போன்ற பிரச்னை ஏற்படாமல் தவிர்த்து சருமத்தை பொலிவுடன் வைத்து கொள்ள உதவி புரியும்.

பீட்ரூட்டின் மூலமாக பித்தப்பை, கல்லீரல், சிறுநீரகம் போன்றவற்றில் இருக்கும் நச்சுத்தன்மை நீக்கப்படுகிறது.