பெண் குழந்தைகளின் ஆரோக்கியம்.. பெற்றோர் கட்டாயம் அறிய வேண்டிய ரகசியம்...
இன்று பெண் குழந்தைகள் சிறிய வயதிலேயே பருவமடைவது ஒரு சவாலான விஷயமாக மாறியுள்ளது.
உடல் ரீதியான இந்த மாற்றங்கள் ஒருபுறம் இருக்க, அது குறித்த சரியான விழிப்புணர்வு பெற்றோர்களிடமும் குழந்தைகளிடமும் போதிய அளவில் இல்லை என டாக்டர்கள் கூறுகின்றனர்.
பருவமடைதல் என்பது ஒரு நாளில் நடக்கும் மாற்றமல்ல; அது ஒரு தொடர் செயல்முறை.
மார்பக வளர்ச்சி, அக்குள் மற்றும் பிறப்புறுப்பு பகுதிகளில் முடி வளர்ச்சி, உடல் துர்நாற்றம், லேசான முகப்பரு மற்றும் திடீர் உயரம் அதிகரிப்பு ஆகியவை இதன் ஆரம்ப அறிகுறிகள்.
8 வயதிற்கு முன்பே இத்தகைய மாற்றங்கள் தென்படுவது, 'முன்கூட்டியே பருவமடைதல்' என்று அழைக்கப்படுகிறது.
பெற்றோர்கள் இதை கண்டு பதற்றமடையாமல், குழந்தைகளுக்கு உடல் மாற்றங்கள் மற்றும் சுகாதாரம் குறித்து விளக்க வேண்டும்.
8 வயதிற்கு முன் அறிகுறிகள் தென்பட்டாலோ அல்லது 14 வயது வரை அறிகுறிகள் இல்லையென்றாலோ, மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம்.