கால்வலி போக தீர்வுகள் சில...

பொதுவாக கால்சியம் குறைவாக இருந்தால் கால்வலி பிரச்னை வரலாம்.

வலியை தவிர்க்க சத்தான உணவு வகைகள் சாப்பிட வேண்டும். இஞ்சி டீ குடித்து வரலாம்.

சுடுநீர் ஒத்தடம், மசாஜ், நடைப்பயிற்சி கண்டிப்பாக மேற்கொள்ள வேண்டும்.

வைட்டமின் சி சத்து அதிகம் உள்ள எலுமிச்சை, நெல்லிக்காய் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

உடல் எடையை சரியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு வேலை செய்யும்போது அரை மணி நேரத்திற்கு ஒரு முறை ரிலாக்ஸ் செய்த பின்னர் மீண்டும் துவக்கலாம்.

40 வயதுக்கு மேல் உள்ளவர்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்தால் கால் வலியை குறைக்கலாம்.