கழுத்து வலி குறைய என்ன செய்ய வேண்டும்?

கழுத்து வலிக்கு குனிந்து எழுதுவது மட்டும்தான் காரணமா மற்ற காரணங்களும் உண்டா என்பதை மருத்துவ பரிசோதனை செய்து தெரிந்து கொள்வது நல்லது.

உதாரணமாக உயரமான தலையணைகளை வைத்து அதிக நேரம் படுத்துக்கொண்டு படிப்பது, 'டிவி' பார்ப்பது, இரவில் அப்படியே துாங்குவது வலியை தரலாம்.

மேலும் அதிக நேரம், கழுத்துக்கும் தோள்பட்டைக்கும் இடையில் கைபேசி வைத்து பேசுவது போன்றவையும் காரணங்களாக சொல்லலாம்.

இந்த பழக்கங்கள் இருந்தால் மாற்றிக்கொள்ளுங்கள். உங்கள் கழுத்து வலிக்கு தசைப்பிடிப்பாக இருக்கும் பட்சத்தில் கழுத்துக்கு போதிய ஓய்வு கொடுத்தால் வலி குறையும்.

கழுத்தில் ஐஸ் ஒத்தடம் கொடுக்கலாம். கழுத்து, தோள்பட்டை தசைகளை வலுப்படுத்தும் பயிற்சிகள் வலியைக் குறைக்க உதவும். உடனடி நிவாரணத்துக்கு இயன்முறை சிகிச்சை சிறந்தது.

கழுத்து குனிந்த நிலையில் அமர்ந்து நீண்ட நேரம் பணிபுரிவதை தவிருங்கள்.

அப்படி பணிபுரிவது கட்டாயம் என்றால் இடையிடையே கழுத்தை நிமிர்த்தி, பக்கவாட்டிலும் மேலும் கீழும் அசைத்துக்கொள்ளுங்கள்.

படுத்து துாங்கும்போது மென்மையான, கனமற்ற தலையணையைப் பயன்படுத்துங்கள்.