லீவ் முடிஞ்சாச்சு… குட்டீஸ்க்கு ஸ்கூல் போபியா ஏற்படுமா?
நீண்ட விடுமுறைக்கு பின் குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல பிடிவாதம் பிடித்து அழுது ஆர்ப்பாட்டம் செய்வார்கள். குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல மறுப்பதற்கு எவையெல்லாம் காரணமாக இருக்கலாம் என தெரிந்துகொள்வோமா…
சில குழந்தைகள் பள்ளியின் புதிய சூழலை ஏற்றுக்கொள்ள முடியாமல் அழுது அடம்பிடிப்பார்கள். ஆனால் ஒரு 20 நாள்கள் பள்ளிக்கு தொடர்ந்து செல்லும் போது அந்தச் சூழல் பழகிவிடும்.
பெற்றோரைப் பிரிய நேரிடும் என சில குழந்தைகளுக்கு அச்சம் ஏற்படும். மேலும் அவர்களுக்கோ அல்லது அம்மாவுக்கோ ஏதேனும் பாதிப்பு வந்துவிடுமோ என குழந்தை பயப்பட கூடும்.
ஆசிரியர்கள், ஸ்கூல் வேன் டிரைவர், ஆயா என புதிய நபர்களை பார்ப்பதற்கு பயந்து கொண்டு குழந்தைகள் பள்ளிக்கு செல்ல அடம்பிடிக்கலாம்.
தன்னை விட சிறிய தம்பி அல்லது தங்கை மட்டும் வீட்டில் இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியால் கூட வீட்டிலேயே இருக்கிறேன் என அடம்பிடிப்பார்கள் சிலர். இதெல்லாம் ஸ்கூல் போபியா இல்லீங்க. சிறு சிறு அச்சங்களே, அவற்றை போக்கினால் போதுமானது.
குழந்தைகளிடம் புதிய பள்ளியில் கிடைக்க உள்ள புதிய நண்பர்கள், ஆசிரியர்கள் பற்றி கூறி நம்பிக்கை கொடுக்கலாம். விளையாட்டு, நடன பயிற்சிகள் குறித்தும் சொல்லி உற்சாகப்படுத்த வேண்டும்.
குழந்தைகளுக்கு பிடித்தமான புதிய பேக்கள், பேனாக்கள், பென்சில்கள், டிபன் பாக்ஸ், மற்றும் பிற பள்ளிப் பொருட்களை வாங்கிக் கொடுத்து மனதை மாற்றலாம்.
பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான, ஸ்நாக்ஸ், கலர் புல்லான மதிய உணவுகளை தினமும் கொடுத்து அனுப்ப வேண்டும்.