குடலிறக்கம் ஏற்பட்டால் என்ன தீர்வு?
வயிற்றுப் பகுதியில் இருக்கும் குடலானது, அது இருக்கும் இடத்தில் இருந்து சற்று கீழ் நோக்கி இறங்குவதைத்தான் குடலிறக்கம் என்று சொல்கிறோம்.
இது ஹெர்னியா என்று சொல்லப்படுகிறது.பிறந்த குழந்தைகள் உட்பட வயதானவர்கள் வரை அனைவருக்கும் குடலிறக்கம் நோய் வருவதற்கான வாய்ப்பு உள்ளது.
வயிற்றுப்பகுதியில், தொப்புள் பகுதியில் வீக்கம் ஏற்படுவது, நீர் வடிதல் போன்றவை அறிகுறிகளாகும்.
குடலிறக்கத்திற்கான சிகிச்சை முறைகள் என்றால் அறுவை சிகிச்சை மட்டுமே தீர்வாகும். ஓபன் சர்ஜரி மற்றும் லேப்ராஸ்கோப்பி அறுவைசிகிச்சை மூலம் சரி செய்யலாம்.
கவனிக்காமல் விட்டுவிட்டால் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு சில நேரங்களில் குடல் இறுகி அழுகும் நிலை ஏற்படும். இது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும்.
பாதிக்கப்பட்டவர்கள் கவனமாக சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். அதிக எடையுள்ள பொருட்களை துாக்கக் கூடாது. இவர்களுக்கு மலச்சிக்கல், நாள் பட்ட இருமல் இருக்கும்.
சிறுநீர் செல்வதில் அடைப்பு ஏற்படும். மலச்சிக்கல் மற்றும் சிறுநீர் பிரிய தடை செய்யாத உணவுகளை எடுத்துகொள்ளலாம். மது, புகைப்பழக்கத்தை தவிர்க்க வேண்டும்.